Friday, April 9, 2010

பிரிட்டனில் நடைபெறும் பார்முலா -2 கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்



சென்னை,​​ மார்ச் 25: பிரிட்டனில் இந்த ஆண்டு நடைபெறும் பார்முலா -2 கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமார் கலந்து கொள்கிறார்.


அஜீத் தவிர இந்தியாவில் இருந்து இப்ராஹிம்,​​ பார்தீவ் சுரேஷ்வரன் ஆகியோர் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.


பிரிட்டனின் சில்வர்ஸ்டோனில் உள்ள கார் பந்தய மைதானத்திலஏப்ரல் 16-ம் தேதி பார்முலா 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.


இது குறித்து அவர் கூறியுள்ளது:


பார்முலா 2 பந்தயத்தில் கலந்து கொள்ளும் நாளை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் களம் இறங்குகிறேன். இதற்காக சமீபத்தில் மலேசியா சென்று பயிற்சி மேற்கொண்டேன். இனி பிரிட்டன் சென்று போட்டி நடைபெறும் சில்வர்ஸ்டோனிலும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன் என்று அஜீத் கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த 2003-ல் அஜீத் குமார் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது பி.எம்.டபிள்யூ. ஆசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டார்.


கடைசியாக பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். கார்பந்தயத்தில் அவர் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். ஆனால் காரில் ஏற்பட்ட பழுது காரணமாக பந்தய தூரத்தை அவரால் ஏட்ட முடியவில்லை. அஜீத் குமார் வரும் மே 1-ம் தேதி 40 வயதை எட்டுகிறார். அவருடன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு இந்திய வீரர்களும் இளைஞர்கள். இதில் இப்ராஹிமுக்கு 21 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


3 பெட்ரூம் பிளாட்டில் அஜீத்!



மூன்று மாத பிளானில் ஃபார்முலா -2 ரேசுக்கு கிளம்பிய அஜீத், ஒன்றரை மாதத்திலேயே திரும்பும் மூடில் இருக்கிறாராம். ஏன்? அவரது மனசுக்குள் புகுந்து புறப்படுகிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது?



அவர் நினைத்தால் நினைத்ததுதான். நல்லவேளையாக இது சலிப்பினால் வந்த ரிட்டர்ன் இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.



அவரது எளிமைக்கு இன்னும் ஒரு சான்று என்று அஜீத் தரப்பில் வைக்கப்படுகிற சங்கதி, ரொம்பவே அழகு. பைவ் ஸ்டார் ஓட்டல்கள், பளபள தங்கும் விடுதிகள் என்று இவர் போயிருக்கிற ஏரியாவில் பிரபலமாக இருந்தாலும், 3 படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றில்தான் தங்கியிருக்கிறாராம் தல. இவருக்கென்று சமைத்துப்போட இந்திய சமையல்காரர் ஒருவரும் அவருடன் இருக்கிறாராம். (குழந்தைக்கு பனி ஒத்துக் கொள்ளாது என்பதால் கடைசி நேரத்தில் குடும்பத்தை இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார் தல)



முதல்வரை சந்தித்து தனது ரேசுக்காக ஸ்பான்சர் கேட்டிருந்த அஜீத், அதன்பின் இந்த விஷயத்தை திரும்ப திரும்ப கேட்டு நச்சரிக்காமல் போனதாலோ என்னவோ, அது பற்றி இவர் கிளம்புகிற வரைக்கும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கும்பிட போனவருக்கு குறுக்கேவே பிள்ளையார் என்பதமாதிரி ஒரு அதிர்ஷ்டம். ஈராசியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் அஜீத்திற்கு ஸ்பான்சர் செய்திருக்கிறதாம். இது ஒருபக்கம் இருந்தாலும், தனது கை பணத்தில் சுமார் இரண்டு கோடி வரை செலவு செய்திருக்கிறாராம் அஜீத்.

ரேசுக்கு தயாராகும் அஜீத்

லண்டன், ஏப். 1:ஐரோப்பாவில் நடைபெறும் பார்முலா2 கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகர் அஜீத் அதற்கான தீவிர தயாரிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் அஜீத்துக்கு கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. உள்ளூர் மற்றும் சர்வதேச கார் பந்தயங்களில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெறும் பார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்க அஜீத் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பார்முலா2 பந்தயத்தில் ஓட்ட உள்ள கார் தனக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை சமீபத்தில் அஜீத் பரிசோதனை செய்து பார்த்தார். இங்கிலாந்தில் உள்ள பெட்போர்டு நகரில் அஜீத் பார்முலா2 காரில் அமர்ந்து பரிசோதனை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அ‌‌ஜீத்

அ‌‌ஜீத் ரசிகர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். பா‌ரின் படம் என்றால் ஹாலிவுட் மாதி‌ரி பிற நாட்டுப் படமல்ல. அ‌‌ஜீத்தின் அடுத்தப் படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகிறது.

அ‌ஜீத்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் இயக்குவதும், கிளவுட் நைன் என்ற நிறுவனம் தயா‌ரிப்பதும் முடிவான விஷயங்கள். துப்பறியும் கதையான இதன் அனைத்துக் காட்சிகளும் வெளிநாடுகளில் படமாகவுள்ளன. இந்தத் தகவலை ஒளிப்பதிவாளர் மனோ‌ஜ் பரமஹம்சா உறுதி செய்துள்ளார். இவர் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

மனோ‌ஜ் பரமஹம்சாவின் முதல் படம் ஈரம். அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா. படத்துக்குப் படம் ஒளிப்பதிவாளர்களை மாற்றும் கௌதமுக்கு பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் பரம திருப்தி. அதனால் அ‌ஜித்தை வைத்து இயக்கும் தனது அடுத்தப் படத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார். எடிட்டிங் ஆண்டனி, பாடல்கள் தாமரை என வழக்கமான அதே டீம்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Friday, April 2, 2010

Ajith F2 Participation

Un piloto indio de 35 años y un búlgaro de 37, los últimos fichaje de la F2:

Lunes, 29 Marzo dos nuevos pilotos engrosan la lista de F2 hasta diecisiete pilotos hasta la fecha. El indio Ajith Kumar y el búlgaro Plamen Kralev, van rellenando esta parrilla F2 que en su segunda edición promete ser tan interesante como la que hizo campeón a Andy Soucek el año pasado. Kumar y Kralev no son precisamente unos jovencitos… el indio cuenta con 35 años y el búlgaro suma ya 37. Ello no es óbice para que quieran disputar al límite sus posibilidades de acceder con el triunfo a la prueba con el Williams F1



Kumar es una gran estrella de cine en su país natal y un piloto de carreras avezado, después de haber competido antes en Asia y Europa. Hizo su debut en competición en 2003, donde se corrió algunas rondas de la serie de Fórmula BMW Asia, y acabó entre los seis primeros durante su campaña inaugural antes de pasar al Reino Unido en 2004 para competir en la Fórmula 3 Británica El disputó diez carreras en la clase nacional y obtuvo dos podios.

El búlgaro Plamen es una de las figuras principales del motor de su país y fue elegido en 2008 por la Agencia Nacional de Turismo como embajador oficial de su automovilismo mundial. Hizo historia en 2009 al convertirse en el primer búlgaro en competir en el prestigioso Le Mans 24 Horas, terminando 11 º en general en un Porsche 911 GT3. Su carrera deportiva comenzó hace relativamente poco en 2007 cuando compitió en la Ferrari Challenge Copa Shell, donde anotó dos carreras y ganó dos pole positions en su temporada inaugural. Regresó a la serie el año siguiente, ganando dos veces y tomando cuatro podios y cuatro poles de ocho carreras, antes de pasar al International GT Open en el GT2, con un 430 de Ferrari en 2009. Al final del año disputó la GP2 Asia Series con el equipo Trident Racing, logrando un progreso sólido en las ocho carreras.

Ajith Kumar dijo: "Estoy muy emocionado por competir en F2. Tengo un gran respeto por Jonathan Palmer - gracias a él ya sus esfuerzos de Fórmula Dos es lo mejor tras la F1. En este momento, todavía es un deporte poco popular en la India, algo más quizás popular en las zonas urbanas. Teniendo en cuenta mi perfil como una estrella de cine, espero utilizar mi estatus para popularizar el automovilismo en la India

Por su parte Kralev dijo: "Estoy absolutamente encantado de unirme a la F2, un campeonato con una larga historia y grandes pilotos. Este año voy a aprender a ser competitivo en los monoplazas, y espero que puedo desarrollar mis habilidades y al final de la temporada de mantener la misma velocidad que los otros chicos, que son mucho más experimentados que yo. Para mí F2 es el único campeonato del mundo que puede coincidir con la GP2, y creo que es adecuado para mi estilo de conducción. También creo que F2 tiene cobertura de televisión y de gran popularidad, y llevar el logotipo de Bulgaria en mi coche como embajador de mi país en el mundo del automovilismo es un orgullo"

Fuente: F2/SLPmedia